முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் தேங்கிய மழை நீரால் கடும
உள்ளூர் செய்திகள் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் தேங்கிய மழை நீரால் கடும் போக்குவரத்து பாதிப்பு
சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
இதனால் தாம்பரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லக்கூடிய ஜி.எஸ்.டி சாலை மற்றும் சென்னையிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லக்கூடிய ஜி.எஸ்.டி சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக தாம்பரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லக்கூடிய ஜி.எஸ்.டி சாலையான பல்லாவரம் பகுதியில் மழைநீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் ஒரு கிலோ மீட்டர் கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனையடுத்து போக்குவரத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீரை அகற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மெதுவாகவும், பாதுகாப்பாகவும் வாகனங்களை இயக்குமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.



