செங்கோட்டையன் வழக்கு-உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்
செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய்குமார் விலகல்.*
தமிழ்நாடு முதலமைச்சரை நான் புகழ்ந்து பேசியதாக திரித்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது; நான் பேசிய பொருளே வேறு - உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் விளக்கம்.
தமிழ்நாடு தொடர்பான ஒரு குற்ற வழக்கை அரசு வழக்கறிஞர் ஒத்திவைக்கக் கோரிய போது நான் சில கருத்துகளை கூறியிருந்தேன்.
உங்கள் முதல்வர் வேகமாக செயல்பட விரும்புகிறார் என்றால், நீங்கள் ஏன் வழக்கை ஒத்திவைக்கக் கோரி மெதுவாக செயல்படுகிறீர்கள்? என்ற பொருளிலேயே கூறினேன்.
ஆனால், தமிழ்நாடு முதல்வரை நான் புகழ்ந்ததாக அது திரித்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சரை நான் புகழ்ந்து பேசியுள்ளதாக சமூக வலைதளங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளதால், செங்கோட்டையன் வெற்றிக்கு எதிரான வழக்கை, நான் விசாரிப்பது தார்மீகமாக இருக்காது.
வேறு அமர்வில் வழக்கை பட்டியலிட பரிந்துரைக்கிறேன்-உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார்.



