GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › சிங்கப்படை எங்கே உதயநிதி கேள்வி
தமிழகம்

சிங்கப்படை எங்கே உதயநிதி கேள்வி

👤 Author 🕐 26 Sep 2026, 05:33 👁️ 14 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
சிங்கப்படை எங்கே உதயநிதி கேள்வி
விளம்பரம்Advertisement
உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது


 பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் - அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே?

சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியில், அரசுப்பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு.

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி, இந்த சம்பவத்தை காவல்துறையும் - அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும் - பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

குற்றவாளிகளைப் பிடிக்க வக்கின்றி பாதிக்கப்பட்ட பெற்றோரின் செல்போன்களை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்று போலீஸ் தரப்பில் மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த Reels ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கு, குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியத்தை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் சித்திரவதை செய்வது போல் இருக்கிறது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். 

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இ உட்பட அனைத்துப்பள்ளி வளாகங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இடைத்தேர்தல் வருகிறது என்று இந்த கொடுமையை மூடி மறைக்க முயற்சித்தால், மக்கள் இந்த ஆட்சியாளர்கள் முகத்தில் கரியை பூசுவது உறுதி. என்று அவர் கூறி உள்ளார்
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement