செஸ் வீரர் பிரக் ஞானந்தாவுக்கு விஜய் வாழ்த்து

கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழகத்தின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்று குறிப்பிட்டுள்ளார்



