காய்ச்சல் பாதிப்பு இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்
தமிழகத்தில் தற்போது, சுவாசத்தொற்று பரவல் அதிகமாக உள்ளது.
அரசு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது; பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.
பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும்.
டெங்கு காய்ச்சல் பரவலும் உள்ளது; இந்த ஆண்டில் இதுவரை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 15,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு முறையான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது- சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்.



