குலதெய்வ கோவிலில் நடிகர் அஜித்குமார் -நெஞ்சில் பகவதி அம்மன் டாட்டூ

கேரள மாநிலம் பாலக்காடு அருகே "பெருவெம்பா" என்ற இடத்தில் மலபார் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் "ஸ்ரீ ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் கோவில்" உள்ளது.
இந்த கோவிலில் நடிகர் அஜித்குமார், மனைவி, மகனுடன் வழிபாடு செய்தார்.
இது அஜித்தின் குலதெய்வ கோவில் ஆகும். கோவிலுக்கு வந்திருந்தபோது அவரது மார்பில் இடம்பெற்றிருந்த
"பகவதி அம்மன்" டாட்டூ இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.



