புதுச்சேரியில் முதன்முறையாக மாத உதவித் தொகை ரூபாய் பத்தாயிரத்துடன் ஓராண்டு "டிஜிட்டல் பயிற்சி திட்டம்"

புதுச்சேரியில் முதன்முறையாக மாத உதவிதொகை ரூ.10 ஆயிரத்துடன் 12 மாதங்களுக் கான கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கான 'டிஜிட்டல் பயிற்சித் திட்டம்' தொடங்கப்பட்டுள்ளது. இதனை பொதுப்பணி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் லட்சமிநாராயணன் தொடங்கி வைத்தார்.



