
தாம்பரம் அடுத்த முடிச்சூரில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் இயங்கி வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அங்கு பெட்ரோல் நிரப்பி சென்ற இருசக்கர வாகனங்கள் அடுத்து அடுத்து பழுதாகி வழியிலேயே நின்று போக காரணம் என்ன என பார்த்தபோது பெட்ரோலுடன் அதிக அளவு தண்ணீர் கலந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டுனர்கள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசரும் விசாரணையை துவக்கினார்கள். இதனால் பெட்ரோல் பங்க் தற்காலிகமாக மூடப்படுவதாக பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் அறிவித்தனர்.