GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › சென்னை விமான நிலையத்தில் திடீர் புகை! பயணிகள் அதிர
தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் திடீர் புகை! பயணிகள் அதிர்ச்சி!

👤 Admin 🕐 28 Jan 2026, 09:21 👁️ 17 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தாம்பரம்:-சென்னை சர்வதேச விமான நிலையம் டெர்மினல் 2 இரண்டாவது தளத்தின் புறப்பாடு பகுதியில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அலுவலகம் அமைந்துள்ளது. அந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் இன்று பகல் 12 மணி அளவில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு பெரும் புகை மண்டலம் சூழ்ந்தது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. அவசர அவசரமாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவசரகால தீயணைப்பான்கள் மூலம், தீயை அணைக்க முயற்சித்ததோடு, புகை மண்டலத்தையும் வெளியேற்ற முயற்சிகள் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் சென்னை விமான நிலைய தீயணைப்பு வண்டிகள் 3 வண்டிகள் விரைந்து வந்து, தீயை அணைத்ததோடு புகை மண்டலத்தையும் வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் விமான நிலைய ஊழியர்கள் புகை மண்டலத்தில் சிக்கித் தவித்தனர். இதை அடுத்து பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதோடு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புறப்பாடு விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள் கொடுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

விளம்பரம்Advertisement

இந்த நிலையில் சுமார் ஒருமணி நேரம் தீயணைப்பு மற்றும் புகை வெளியேற்றப்பட்டு முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதில் தீ விபத்தில் சில ஆவனங்கள், கோப்புகள் எரிந்து பெரும் புகை மண்டலம் போன்றவைகள் தான் சூழ்ந்து பயணிகள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது. இதில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. ஆனாலும் புகை மண்டலத்தால் பயணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அவசரமாக சர்வதேச முனையத்தில் போட்டிங் பாஸ்கள் கொடுப்பது நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இப்போது நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது. மீண்டும் போட்டிங் பாஸ் கொடுப்பது தொடங்கிவிட்டது. எனவே இதில் அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை. ஆனால் இந்த தீ விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறோம். இந்தக் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக நாங்கள் அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கிறோம் என்று கூறுகின்றனர்.

இதனால் 7 விமான சேவைக்காண பயணிகள் வேறு நுழைவாயில் உள்ளே தகுந்த சோதனைகுட்பட்டு செல்லுமாறு ஏர்போர்ட் அதிகாரிகள் அறிக்கையில் தெரிவித்தனர்.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement