பழனிக்கு 420 ஆண்டாக நடக்கும் தைப்பூச யாத்திரை

பழநி தைப்பூசத்தை முன்னிட்டு, காரைக்குடி நகரத்தாரின் 420 வருட பாரம்பரிய காவடி இன்று காலை நத்தம் வந்தடைந்தது.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் இருந்து கடந்த 26-ம் தேதி 352 காவடிகளுடன் நகரத்தார் பழநி நோக்கி புறப்பட்டனர். 420 ஆண்டுகளாக தொடர்ந்து பழநியில் நடைபெறும் தைப்பூசவிழாவிற்கு குன்றக்குடியில் இருந்து காவடியை சுமந்து பாதயாத்திரையாக பழநி நோக்கி செல்வது வழக்கம்.
அவர்தம் முன்னோரின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் நெற்குப்பை, கண்டனூர், காரைக்குடி பகுதிகளை சேர்ந்த நகரத்தார்கள் ஆண்டுதோறும் இந்த பாதயாத்திரையை மேற்கொள்கின்றனர்.



