கல்லூரி மாணவி கர்பமாக்கி, திருமண செய்ய மறுத்த கல்லூரி மாணவர் கைது…

சென்னை:- தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஆதம்பாக்கத்தில் உள்ள விமான நிலையம் மற்றும் மேலாண்மை கல்லூரியில்படித்து வந்தார்.அவர் தன்னுடன் இரண்டாம் ஆண்டு படித்து வந்த கல்லூரி மாணவர் விழுப்புரத்தை சேர்ந்த ஆகாஷ் (19) என்பவர் இரண்டு வருடமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் கல்லூரி மாணவி வீட்டிலும் ,பல்வேறு இடஙகளுக்கும் சென்று தனிமையில் இருந்ததால் மூன்று மாத கர்பிணியாக ஆனதால் ஆகாசை தன்னை திருமணம் செய்ய கொள்ளும்படி கூறினார். அப்போது ஆகாஷ் திருமணம் செய்ய மறுத்ததால், இது குறித்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆகாசை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



