காங்கிரஸ் தேவையில்லாத ஆணி - அமைச்சர் ராஜகண்ணப்பன் பரபரப்பு பேச்சு

ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கூறி வருவதால் திமுகவினருடைய கொந்தளிப்பு ஏற்பட்டது. சமூக வலைத்தளங்களில் பலரும் காங்கிரசை கடுமையாக தாக்கி வருகிறார்கள். காங்கிரஸ் தேவையில்லாத ஆணி என்று கூறியுள்ளனர்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண் ணப்பன் பேசியதாவது:- காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தாலும் பரவாயில்லை வராவிட்டாலும் பரவாயில்லை என்று காங்கிரசை கடுமையாக விமர்சித்தார்.
மீண்டும் தி.மு.க. ஆட்சி வரும். எந்த கூட்டணி என்றாலும் சரிதான், மு.க.ஸ்டாலின் சொல்வதை கேட்பது தான் நம் கொள்கை. கருணாநிதி 110 இடங்களில் வெற்றி பெற்றபோது கூட்டணி ஆட்சியா அமைத்தார். வருகின்ற தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 150 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார். இதனால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. வேண்டுமென்றால் கேட்கிறதை செய்து கொடுக்கின்றோம். கேட்டு பெற்று கொள்ளுங்கள்.கன்னியாகுமரிக்கு சென்றபோது காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒரு கோரிக்கை வைத்தார். அதை செய்து கொடுத்தேன். நாங்கள் எந்த கட்சி எம்.எல்.ஏ. என்றா பார்த்து செய்கின்றோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கும் கேட்டதை செய்து கொடுக்கிறோம். அதனால் வேண்டும் என்பதை கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.



