ஆட்சியில் பங்கு காங்கிரஸுக்கு உரிமை உள்ளது - திருமாவளவன் பேட்டி!

சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கோருவது குறித்து தெளிவான கருத்தை தெரிவித்துள்ளார். “காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு கேட்க உரிமை உள்ளது. காங்கிரஸ் மீண்டும் பங்கு கோரிக்கையை எழுப்பக் கூடாது என்று இல்லை. பிரச்னை சுமுகமாக முடியும். கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.



