தவெக ஆட்சிக்கு வந்தால்… விஜய் கொடுத்த வாக்குறுதிகள்!

தவெக ஆட்சிக்கு வந்தால் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் ஆணையர்களில் சரிப்பாதி பெண்களாக இருக்கும்படி செய்வோம்.
இளைஞர்கள் சீரழியாமல் இருக்க போதைப்பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.
மலை கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
ஆட்டோ, டாக்சி, லாரி ஓட்டுநர்களின் குடும்பத்திற்கு நலவாரியம் அமைக்கப்படும்.
விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்களுக்காக திட்டங்கள் உருவாக்கப்படும்.
தவெக ஆட்சியில் ஆண், பெண் குழந்தைகள் பாதுகாப்பு சரியாக இருக்கும்; சட்டம் ஒழுங்கும் கட்டுப்பாடுடன் இருக்கும்.
அரசுப்பள்ளிகள், கல்லூரிகள் முதல் தரமானதாக இருக்கும்; அரசு பள்ளிகளில் சுத்தமான, கதவுகள் கொண்ட கழிவறை அமைக்கப்படும்.
அரசு பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்கள் போட்டித்தேர்வுக்கு ஏற்றார்போல் மாற்றியமைக்கப்படும்.
பேருந்து போக்குவரத்துக்கு தட்டுப்பாடே இல்லாத நிலை.
தென் தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க கவனம் செலுத்தப்படும்.



