விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 25 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மீட்புப் பணி நடந்தபோது ஆலையின் இன்னொரு அறை வெடித்துச் சிதறியதில் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் உட்பட மொத்தம் 19 பேர் காயமடைந்தனர்.



