உங்க சந்தன கட்டை வேண்டாம்..நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவில் சிக்கல்!
நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவுக்காக தமிழக அரசு வழங்கும் சந்தனக்கட்டைகளைப் பெறப்போவதில்லை என்று தர்கா நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சந்தனக்கட்டைகளைப் பெற்றுக்கொள்ள வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதில் முறையான நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகானின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தரப்பில் அதிருப்தி எழுந்துள்ளது. முதல்வர் விஜய் நாளை சந்தனக்கட்டைகளை வழங்கவுள்ள நிலையில், தர்கா நிர்வாகத்தின் இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



