முகப்பு ›
மாவட்ட செய்திகள் › மதுராந்தகம் இடைத்தேர்தலால் நிறுத்திவைக்கப்பட்ட இலவ
மாவட்ட செய்திகள் மதுராந்தகம் இடைத்தேர்தலால் நிறுத்திவைக்கப்பட்ட இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இலவசப் பேருந்துப் பயணத் திட்டம், தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மீண்டும் தொடங்கப்பட்டது.
இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தின் தொடக்க விழா தாம்பரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் தமிழக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் கலந்துகொண்டு, திட்டத்தை மீண்டும் தொடங்கி வைத்தார்.
அப்போது, இலவசப் பயணத் திட்டத்தின் கீழ் பேருந்தில் பயணம் செய்ய வந்த பயணிகளிடம், அவர்கள் எந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டறிந்த அமைச்சர் சரத்குமார், அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான பயணச்சீட்டுகளை வழங்கினார்.



