கொடிகட்டி பறக்கும் குற்றச் சம்பவங்கள் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வருமாறு
வடக்கு, தெற்கு, மேற்கு, தலைநகர் என எல்லா திசைகளிலும் குற்றச் சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.
காவல்துறையினரால் ரோந்துப் பணி மேற்கொள்ளப் படுகிறதா இல்லையா?
சிங்கப்பெண் அதிரடிப்படையினர் ரீல்ஸ் போடுவதில் காட்டும் ஆர்வத்தைப் பெண்களின் பாதுகாப்பில் காட்டுவார்களா மாட்டார்களா?
காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் புகார் தெரிவித்தவர்களே கொலைக்கு உள்ளாகும் அராஜகத்துக்கு முடிவு எப்போது?
குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா? கண்காணிப்பு இல்லாமல் போனதைத்தானே திண்டுக்கல் மாவட்டக் கொலைச் சம்பவம் காட்டுகிறது? - என்று மு.க.ஸ்டாலின். கேள்வி விடுத்தார்



