நகை, பணத்தை காட்டி ரீல்ஸ் போட்டதால் யூடியூபர் வீட்டில் 118 சவரன் நகை கொள்ளை
நாகர்கோவில் - விஐபி கார்டனில் உள்ள யூடியூபர் மதுமிதா தம்பதியின் வீட்டில் இரவு பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 118 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- "மாசம் மாசம் நாங்க தங்கம் வாங்குவோம், நீங்களும் வாங்குங்கள்" என்று பெருமையடித்து தங்களிடம் உள்ள நகைகளை வீடியோவில் காட்டி வந்ததே இந்த கொள்ளைக்கு வழிவகுத்துள்ளது.
- சமூக வலைதளங்களில் பெருமைக்காக உங்கள் தங்கம், பணம், விலை உயர்ந்த பொருட்களை காட்டி வீடியோ போடாதீர்கள்.
- உங்கள் செல்வத்தை விளம்பரப்படுத்துவது திருடர்களுக்கு நீங்களே வழிகாட்டுவதற்கு சமம்.
- வியூஸுக்காக பெருமையடிப்பது திருடர்களுக்கு நீங்களே முகவரி கொடுப்பதற்கு சமம்.



