
வங்கக்கடலில் வலுப்பெறும் புயல் வரும் 5ஆம் தேதி காலை நெல்லூர்- மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கிறது.
இதனால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிவித்துள்ளது சென்னையில் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது புயல் சென்னை கடற்கரை ஓரமாக நகர்ந்து சென்றாலும் சென்னையில் அதன் தாக்கம் இருக்கும் எனவே புயலை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் செய்துள்ளனர் தாம்பரம் மாநகராட்சிகளும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனையில் இன்று மெட்ரோ ரயில் பயணம் செய்ய ரூபாய் ஐந்து மட்டுமே கட்டணம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது புயல் காரணமாக அதிக அளவில் மக்கள் மற்றவர்களில் செல்ல மாட்டார்கள் என்பதால் வருகிற 14-ஆம் தேதியும் இதே போல ரூபாய் ஐந்து கட்டணத்தில் செல்லலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது மேலும் புயலை ஒட்டி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நாளை ஐந்தாம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு சென்னை காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட போதும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்காததால் மாணவர்கள் பெரும் அவதிப்பட்டனர். இது தொடர்பாக புகார்களும் எழுந்தன. இந்த நிலையில் இப்போது முன்கூட்டியே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.