
மதுரை ஆதீனம் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது .அவர் உடல் நல குறைவு காரணமாக படுக்கையில் இருக்கிறார் .இந்த நிலையிலும் விசாரணை நடந்து வருகிறது .இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி வானதி சீனிவாசன் கூறியதாவது:-
வயது முதிர்ந்த, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை ஆதீனத்தை எப்படியாவது கைது செய்து, கொடுமைப்படுத்த வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக இருப்பது தெரிகிறது. அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் கூட நடக்காத கொடுமைகள் எல்லாம், திமுக ஆட்சியில் நடக்கிறது. மதுரை ஆதீனம் மீதான அடக்குமுறையை திமுக அரசு கைவிட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.