
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் வரும் 7 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர கூடும் என்றும், 12 ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்க கடலில் தமிழ்நாடு – இலங்கை கடலோர பகுதிகளை அடையும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.மழை சற்று லீவு விட்டது போல தெரிந்துள்ள நிலையில், அடுத்த ரவுண்டுக்கு ரெடியானது என்பது போல வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் வரும் 7 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மேற்கு – வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்றும், வரும் 12ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக் கடலில் தமிழ்நாடு – இலங்கை கடலோர பகுதிகளை அடையக் கூடும் எனவும் கணிக்கபட்டுள்ளது.