
தேசிய அளவில் புதிய செய்திகள் வரும் திமுக செயல்வீர்களுக்கு நன்றி தெரிவித்த டி.ஆர்.பாலு பேச்சு, வெற்றிக்காக உழைத்த செயல்வீரர்களுக்கு மட்டன் பிரியாணியுடன் மதிய உணவு பரிமாறப்பட்டது.
தாம்பரத்தில் திமுக செயல்வீரகள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்த அனைவருக்கும் டி.ஆர்.பாலு நன்றி தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர் 7 முறை மக்களால் தேர்தெடுக்கப்பட்டுள்ளேன். இன்றும் மக்களுகாக ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன். நேரிலும் செல்போனிலும் எப்போது வேண்டுமானல் என்னை தொகுதி மக்கள் தொடர்புகொள்ளலாம்.
தேசிய அளவில் புதிய செய்திகள் வரும் அதனை நீங்களாக புரிந்துகொள்ளுங்கள் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி, மண்டலகுழு தலைவர்கள் டி.காமராஜ், இந்திரன், ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செயல்வீரகளுக்கு மதிய உணவாக மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை மசாலா பரிமாறப்பட்டது.