
மதுரைக்கு வரும் அமித்ஷாவை அன்புமணி சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 8-ம் தேதி மதுரை வரும் அமித்ஷா, NDA கூட்டணி தலைவர்களை சந்திக்கிறார். அப்போது பாமக உடனான கூட்டணியை இறுதிசெய்திட வேண்டுமென திட்டமிட்டுள்ளார். அதிமுகவுடனான கூட்டணி அறிவிப்புக்கு முந்தைய நாள் அன்புமணியை கட்சிப் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியது குறிப்பிடித்தக்கது.