WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%header%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

பொன்முடிக்கு சொத்துகுவிப்பு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் மீது திமுகவினரின் குற்றசாட்டு நல்லது அல்ல…நீதிபதி ஜெயச்சந்திரன் யார்? – GST Road News

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%footer%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts LEFT JOIN wp_term_relationships ON (wp_posts.ID = wp_term_relationships.object_id) WHERE 1=1 AND ( wp_term_relationships.term_taxonomy_id IN (3267) ) AND wp_posts.post_type = 'wp_template' AND ((wp_posts.post_status = 'publish')) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

data-elementor-type="wp-post" data-elementor-id="17" class="elementor elementor-17">

க.பொன்முடிக்கு சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இரண்டு நாள் கழித்து தண்டனை விபரங்களை அளித்தார். அதில் 3 ஆண்டு சிறைத்தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். தண்டனையை மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் பொன்முடி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரனை வழக்கம் போல் திமுக விமர்சித்துள்ளது. திமுகவினர் எப்போதும் இதுபோன்ற செயலில் இறங்குவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு பற்றி கருத்து தெரிவிக்கலாம் ஆனால் தீர்ப்பளித்தவருக்கு நோக்கம் கற்பித்து பேட்டி அளிப்பது நீதிமன்ற அவமதிப்புக்கு வழி வகுக்கும்.

“நீதிபதி ஜெயச்சந்திரன் அப்பழுக்கற்றவர், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர். ஆனால், அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்துள்ளார். பொன்முடி வழக்கில் சொத்துகள் முடக்கும் கோப்புகளை கையாண்டுள்ளார். இதனை #LatentBias என சட்ட முறையில் கூறுவார்கள்.

இதை நாங்கள் நீதிபதியிடமே எடுத்துச் சொன்னோம். ”நீங்கள் அப்போதே சொல்லியிருந்தால் கூட நான் வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன்” என பதிலளித்தார். இது முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த பிரச்னை.

இதையெல்லாம் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் முன்வைப்போம்”என பொன்முடியின் வழக்கறிஞர்என்.ஆர்.இளங்கோ பேட்டி அளிக்கிறார்.

நீதிபதி ஜெயச்சந்திரனிடம் தனியாக பேசியதையும் , it is just his speaking observation அதற்கு அவர் அளித்த பதிலையும் பொதுவெளியில் நீதிபதியின் அனுமதி இல்லாமல் பேட்டியாக பதிவிட்டு பொதுமக்கள் மத்தியில் நீதிபதியின் செயலுக்கு உள் நோக்கம் கற்பித்துள்ளது நீதிமன்ற அவமதிப்புக்கு வழி வகுக்கும் ஒன்றாகும்.

இதை திமுக வழக்கறிஞர் பேட்டியாக சொல்கிறார், இது பொன்முடியின் ஒப்புதல் பெற்றுத்தான் சொல்லப்பட்டதா? திமுக தலைமை இந்த பேட்டிக்கு ஒப்புதல் தந்துள்ளதா தெரியவில்லை. காரணம் இதுபோன்ற நீதிபதிகளை விமர்சிப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். இது பொன்முடி வழக்கில் அவருக்கு மேலும் பாதிப்பை உண்டுபண்ணும். வழக்கறிஞர் பேட்டி அளித்ததை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவும் நீதிபதியை விமர்சிப்பதாக உள்ளது. டி.ஆர்.பி ராஜா ஐடி விங்கின் தலைவர், அவர் தீர்ப்பளித்த நீதிபதியை விமர்சித்து பொதுவெளியில் அவரது நோக்கத்துக்கு அர்த்தம் கற்பித்து அவதூறு செய்வது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்புக்குரிய குற்றமாகும். அவர் தனி நபரல்ல திமுக ஐடிவிங்கின் தலைமை நிர்வாகி, நீதிபதி ஜெயச்சந்திரன் மீது அவதூறு கிளப்புவதன் மூலம் அவரது ஃபாலோயர்ஸ்க்கும் இத்தகவலை பரப்ப வைக்கிறார்.

அவர் அதிமுக ஆதரவு அக்கட்சியின ஆட்சி காலத்தில் பணியில் இருந்தார் என்றால் ; ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அன்று இவர் அளித்த தீர்ப்பு, அக்கட்சியை புரட்டிப்போட்டது..

இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் யார்? தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி வேலூரில் பிறந்தவர். சென்னை சட்டக்கல்லூரியில் 1983 ஆம் ஆண்டு சட்டம் படித்த இவர், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் எம்.எல். படித்தார். போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வுப்படிப்பை முடித்து இருக்கிறார் ஜெயச்சந்திரன்.

இது இவர்களுக்கு முதல்முறை அல்ல. ஏற்கனவே திமுக சட்டப்பணிகள் குழு தலைவர் ஆர்.எஸ்.பாரதி பட்டியலினத்தினவரை நீதிபதி ஆக்கிய கலைஞர், அது கலைஞர் போட்ட பிச்சை என பட்டியலின நீதிபதிகளை சமூக ரீதியாக அவமானப்படுத்தினார். அது கடும் விமர்சனத்துக்குள்ளானது. அடுத்து திமுக அமைச்சர்களின் வழக்குகளை suo-motu எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை தனிப்பட்ட முறையில் விமர்சித்து அவதூறு பரப்பினார். இதை கண்டித்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆகவே இதுபோன்ற செயல்களை தொடர்ந்து செய்துவரும் இவர்கள் மீது நீதிமன்றமே தாமாக முன்வந்து அவதூறு வழக்கு தொடுக்க வேண்டும்.

திமுக தலைமை இதை கவனித்தில் கொள்ள வேண்டும்.

பொன்முடி போல தமிழகத்தில் பொறுப்பு வகித்தவர்கள்,
கடந்த காலத்தில் #ஜெயலலிதா, கல்வி அமைச்சராக இருந்த #பொன்னுசாமி, #செல்வகணபதி, #இந்திரகுமாரி,#பாலகிருஷ்ணரெட்டி, #செந்தில்பாலாஜி,
இந்தியா அளவில் #லாலுபிரசாத், காங்கிரஸ #சுக்குராம் என பலர் உண்டு.

சென்னை வழக்கறிஞர், நண்பர் லில்லி தாமஸ் (மலையாளி)வழக்கின் தீர்ப்பு எவ்வாறு தண்டனை பெற்ற எம்.பி. எம்.எல்.ஏ களின் தலைவிதியை 2013இல் உச்சநீதி மன்றம் சீல் வைத்தது . இப்படி உச்சநீதி மன்றம் வழக்குகள் பல உண்டு. இந்திய பிரதமராக இருந்தவர் நுண்மாண் நுழைபுலம்
கொண்ட பி. வி. நரசிம்ம ராவே நீதிமன்றத்தில் குற்றவாளியாக நின்றார் என்ற ஊழ்.