சென்னை உயர்நீதி மன்றத்தின் 34 வது தலைமை நீதிபதியாக கல்பாத்தி ஶ்ரீ ராமுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்,அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

சிறார் ஆபாச பட வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்புக்கு தடை

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சிறார் ஆபாச படங்களை பார்த்ததாக திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளைஞர் மனு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘சிறார் ஆபாச படம் பார்ப்பது சட்டப்படி தவறு அல்ல; அதனை மற்றவர்களுக்கு அனுப்புவதுதான் தவறு’ எனக் கூறி வழக்கில் இருந்து இளைஞரை விடுவித்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை எதிர்த்து, குழந்தைகள் உரிமை அமைப்பு […]

உயர்நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை; நீதிபதி ஆர்.பூர்ணிமா, நீதிபதி ஜோதிராமன், நீதிபதி அகஸ்டின் தேவதாஸ் மரியா பெயர்களை பரிந்துரைத்தது கொலிஜியம் கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் 3 பேருக்கு பதவி உயர்வு 3 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டால் காலியிடங்கள் 10ஆக குறையும்

எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அனுமதி அளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு தடை கோரி மேலும் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல்!

அரசுத்தரப்பில் ஏற்கனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ் வழியில் அர்ச்சகராக பயின்ற அரங்கநாதன் என்பவரும் மேல்முறையீட்டு மனு தாக்கல்!

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவனை நியமித்து ஜனாதிபதி உத்தரவு அளித்துள்ளார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள கங்காபூர்வாலா நாளையுடன் ஓய்வுபெறுகிறார். தலைமை நீதிபதி கங்காபூர்வாலா ஓய்வுபெறும் நிலையில் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம் செய்துள்ளனர்.

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சந்தேகத்தின் அடிப்படையில் தோ்தலைக் கட்டுப்படுத்தவோ அல்லது தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கவோ முடியாது. மற்றொரு அரசியல் சாசன அமைப்பைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை என்று தெரிவித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமர்வு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை (விவிபேட்) முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது.

அமலாக்கத்துறையால் கைதாகியுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மனுவும் நிராகரிப்பு

“மாநிலத்தை நாங்கள் நிர்வாகிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தீர்வை அளிக்க முடியாது” என நீதிபதிகள் கருத்து

சனாதன பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை” -நீதிபதி அனிதா சுமந்த்

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்த கோ-வாரண்டோ வழக்குகளை முடித்து வைத்து தீர்ப்பளித்தது.

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா ஊழல் வழக்கு – சிபிஐ பதிலால் நீதிபதி அதிருப்தி

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் நடந்த குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரியை நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணைக்கு அனுமதி கிடைக்கவில்லை என சிபிஐ தரப்பில் மீண்டும் நீதிமன்றத்தில் தகவல் தொடர்ந்து பலமுறை இதே காரணத்தை கூறுவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, விசாரணை அதிகாரியை ஆஜராக உத்தரவிட்டு வழக்கை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்