
அதன்படி, வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள், துர்யா ஓட்டல் முன் U டர்ன் செய்து துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் செல்லலாம். அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள், உலக வர்த்தக மையத்தின் முன் U டர்ன் செய்து அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வேளச்சேரி செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றம் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.