
தீபாவளி பண்டிகை அதை தொடர்ந்து வரும் நோன்பு விரதம், பூஜை உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு பழங்களின் தேவை அவசியம் என்பதால் கோயம்பேடு பழ வணிக வளாகம் விடுமுறையின்றி வழக்கம் போல் செயல்படும் என அனைத்து பழ வியாபாரிகள் சங்கங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தீபாவளி பண்டிகைக்கு மறுதினம் (13-11-2023 திங்கள்கிழமை) கோயம்பேடு வணிக வளாகத்திற்கு விடுமுறை என்ற அறிவிப்பு காய்கறி சந்தைக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பழச் சந்தை வழக்கம் போல் செயல்படும் என சென்னை பழக்கமிஷன் ஏஜெண்டுகள் சங்கத் தலைவர் சீனிவாசன் (9884577788) தெரிவித்துள்ளார்.