
விமானிகள் பற்றாக்குறை காரணமாக இண்டிகோ நிறுவனத்தின் 1,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, தினமும் நாடு முழுவதும் 2,200 விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில், விமானிகளின் பணி நேர வரம்பு (எப்டிடிஎல்) குறித்து கடந்த மாதம் திருத்தப்பட்ட விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, விமானிகளுக்கு பணிநேரம், ஓய்வுநேரம் நிர்ணயிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், விமானிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது