
வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய 3 விசைப் படகுகளும், ஒரு நாட்டுப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த 74 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த பல ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட 242 மீன்பிடிப் படகுகளும் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது