
கடந்த 20-ம் தேதி தங்கத்தின் விலை ரூ.82,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.83 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.83,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.23) காலை கிராம் ஒன்றுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,500-க்கும், பவுன் ஒன்றுக்கு ரூ.560 என உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.84,000-க்கும் விற்பனை ஆகிறது