
தூத்துக்குடியில் 16 ஆயிரம் கோடி செலவில் வியட்நாம் நாட்டின் வின் பாஸ்ட் கார் நிறுவனம் தொழிற்சாலையை தொடங்கி 15 மாதத்திற்குள் கார் உற்பத்தியை தொடங்கிவிட்டது இன்று கார் உற்பத்தியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் ஆண்டுக்கு 50 ஆயிரம் கார்கள் முதலில் தயாரிக்கப்படும் என்றும் பின்னர் இது 1.5 லட்சம் ஆக உயரும் என்றும் தெரிவித்தனர் இதில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் நான் முதல்வன் திட்டத்தில் படித்த தூத்துக்குடி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது