
டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 12 ஆயிரம் பேர் இந்த நிதியாண்டில் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 2 சதவீதம்தான். செயற்கை நுண்ணறிவுக்கு முன்னுரிமை கொடுக்கும்வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட உள்ள அனைவருமே இடைநிலை மற்றும் மூத்த நிலையில் பணியாற்றி வரும் ஊழியர்களாவர். ஒட்டு மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் இந்த ஆட்குறைப்பு என்பது வெறும் 2 சதவீதம் மட்டுமே. இது எளிதான முடிவு அல்ல” என்றார். இந்த பணி நீக்க நடவடிக்கை என்பது, 2026-ம் ஆண்டு நிதியாண்டில் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது.