
இந்தியாவில் உள்ள முக்கிய “சுற்றுலா, ஆன்மிக தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரத்தை பல்வேறு கடற்பயண திட்டங்களின் மூலம் மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து சுமார் 100 பேர் பயணம் செய்யும் வகையிலான பெரிய படகில் தனுஷ்கோடி வரை சென்று மீண்டும் அங்கிருந்து புறப் பட்டு தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம் வந்து அங்கிருந்து, பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து குருசடை தீவு என ராமேசுவரம் தீவை சுற்றி வரும் வகையில் உள்ளூர் படகு போக்குவரத்து தொடங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக அக்னி தீர்த்த கடற்கரை யில் அதற்குரிய பெரிய படகை நிறுத்த வசதியாக ரூ.6 கோடி நிதி யில் 200 மீட்டர் நீளத்தில் படகு நிறுத்தும் தளம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்த னர் .