
நைக்கி நிறுவனத்தின் தலைமை வழங்கல் அலுவலர் (Chief Supply Chain Officer) திரு.வெங்கடேஷ் அழகிரிசாமி மற்றும் உயர் அலுவலகர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் நைக்கி நிறுவனத்தின் தோல் அல்லாத காவணிகளின் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், ஆடைகள் உற்பத்திக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது, சென்னையின் தயாரிப்பு உருவாக்கம் மற்றும் வடிவமைப்பு மையத்தை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் திரு.வி.அருண் ராய், இ.ஆ.ப., தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு.வே.விஷ்ணு, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலகர்கள் உடனிருந்தனர்.