
கடைசி சம்பளத்தில் 50 சதவீகிதம் பென்சன் வழங்க நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க கோரி தாம்பரம் மின்சார ரெயில்வே பனிமனை முன்பாக 300 க்கும் மேற்பட்ட எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை வலியுறுத்தி ஆர்பாட்டம்
நாடு முழுவதும் 2004ல் அறிவிக்கப்பட்ட தேசிய பென்சன் திட்டத்தால் தொழிலாளர்களுக்கு பலன் கிடைக்கவில்லை என கோரி தொடர்போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில்,
இன்று தாம்பரம் மின்சார ரெயில்வே பணிமனை முன்பாக எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொதுசெயலாளர் ஈஸ்வரலால் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் மத்திய அரசு மற்றும் ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2004ல் அறிவித்த தேசிய பென்சன் திட்டத்தால் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு பணியாளர்களுக்கு எந்த பலனும் இல்லை ஓய்வு பெற்றவுடன் என்ன தொகை பெறபோகிறோம் என்கிற உத்திரவாதம் இல்லை இதனால் நாடு முழுவதும் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடுகிறோம். கடந்த மே மாதம் முழு அளவில் போராட்டம் அறிவித்த நிலையில் பாஜக அரசு தேர்தல் நேரம் எனகுறிபிட்டு கடைசி சம்பளத்தில் 50 சதவீகிதம் என உத்திரவாதம் கொடுத்தது அதனை முறையாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிவித்து அதற்கான பலன்களை வழங்கிடவேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது லேசான தூரல் மழை பெய்தலும் கலையாமல் தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர.
அடுத்த கட்டமாக தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி முழு அளவில் ரெயில்வே பணிசெய்யாமல் முடக்கப்போவதாக தெரிவித்தனர்.