
சென்னை வேங்கைவாசலில் அரசு உதவி பெரும் அட்வெண்ட் கிறிஸ்தவ தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கிவைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார்.
சென்னை அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில் அரசு உதவி பெரும் அட்வெண்ட் கிறிஸ்தவ தொடக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் துவக்கிவைத்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். மாணவர்களுக்கு லட்டு, சர்க்கரை பொங்கல், உப்புமா, சாம்பார் காலை உணவாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்தரமேஷ், கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ், ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதா பாரதிதாசன், வேங்கைவாசல் ஊராட்சி தலைவர் வி.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் மாணவர்களுடன் அமர் து காலை உணவு உட்கொண்டனர்.
அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்:- வரலாற்று சிறப்பு மிக்க காலை உணவு திட்டம் பெரும் வரவேறு பெற்றுள்ளது. மாணவர்கள் கற்றல் திறன் அதிகரித்துள்ளது. இதனை கண்ட முதலமைச்சர் தாயுள்ளத்துடன் ஊரகம மற்றும் அரசு உதவி பெரும் ஆரம்ப பள்ளிகளிலும் இன்று துவக்கிவைத்தார். அதன் ஒருபகுதியாக இங்கும் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு திட்டத்தை துவக்கினேன் என்றார்.