
குரோம்பேட்டை ராதா நகர் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் சார்பாக வசந்த மண்டபத்தில் 13 ஆம் ஆண்டு ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 5 மணிக்கு மூலவர் திருமஞ்சனமும் 9 மணிக்கு சங்கல்பம் 10மணிக்கு அனுக்ஷை புண்ணியாக வாசகம் கும்ப பூஜை 11:30 மணிக்கு ஹோமங்கள் 12 30 மணிக்கு பூர்ணாஹுதி நடைபெற்று ஒரு மணிக்கு மகா தீபாரணை செய்யப்பட்டு பக்தகோடிகளுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டு உபயதாரர்களை கௌரவித்தனர் மேலும் தேர்வெழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை ஹோமத்தில் செய்யப்பட்டதுஇதில் திரளான பக்தர்கள் ஹோமத்தில் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி சபாவினர் வெகு விமர்சையாக செய்திருந்தனர்.