
குரோம்பேட்டை ராதா நகர் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் அமைந்திருக்கும்ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக நடைபெற்றது காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று அலங்காரம் செய்து ஆஞ்சநேயர் ஆலயத்தின் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஆஞ்சநேயரின் உள்பிரகாரத்தில் வடை மாலைகள் சாற்றப்பட்டு பாதாம் முந்திரி ஏலக்காய் திராட்சை கிராம்பு மற்றும் உலர் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதை சுற்றுவட்டாரத்தில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் இன்று மாலையில் சிறிய வீதி புறப்பாடு நடைபெற உள்ளது விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பட்டாச்சாரியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.