
மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் தொடர் முயற்சியால் 3 பிரிவுகளுக்கு உட்பட்ட இந்த மின் கம்பத்தை சீரமைத்து புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி வாழ் பொதுமக்கள் அனைவரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இதற்கு உறுதுணையாக இருந்த செம்பாக்கம், சிட்லபாக்கம், நேரு நகர் ஆகிய மூன்று மின் பிரிவுக்கும் உட்பட்ட உதவி பொறியாளர்கள், செயற்பொறியாளர் அசோகன் மற்றும் உதவி செயற்பொறியாளர் சிவராமன் ஆகிய அனைவருக்கும் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் நன்றி தெரிவித்தார்.