
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தே.மு.தி.க. பொதுச்செய லாளர் பிரேமலதா விஜயகாந்த் மாவட்டவாரியாக நிர்வாகிக ளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் அவர், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டம் முடிந்த பின்னர் பிரேமலதாவிடம், “விஜய காந்தை மையப்படுத்தி மக்கள் நலக்கூட்டணி அமைத்தது போன்று, தற்போது விஜய்யை மையப்படுத்தி 2-வது மக்கள் நலக்கூட்டணி அமைந்தால் தே.மு.தி.க. இடம்பெறுமா?” என்று நிருபர்கள் கேட்டதற்கு, “கூட்டணி குறித்து எங்களது விளக்கத்தை கொடுத்துவிட்டோம். இப்போது எங்கள் கட்சியை மட்டும்தான் நாங்கள் ‘போகஸ்’ பண்ணி வருகிறோம். கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படும். அதன்பிறகு எந்த அணியுடன் கூட்டணி, எத்தனை தொகுதிகள், யார் வேட் பாளர் என்பது குறித்து அறிவிக்கப்படும்” என்று பிரேமலதா பதில் அளித்தார்.