
தங்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக வேண்டும் என்றே அரசுக்கு ஏற்படுத்திய இழப்பு அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம் ஆகிவிடும் என்று ஊழல் தி.மு.க., அரசு பயப்படுகிறதா என தமிழக பா.ஜக., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக தமிழக பா.ஜக., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் வேண்டும். ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க., அரசின் இந்த கோழைத்தனமான நடவடிக்கை, ஆட்சிக்கு வந்த நாள் முதல் நமது மாநிலத்தின் வளங்களை சுரண்டிய குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற தி.மு.க.,வின் நடுக்கத்தைத்தான் உணர்த்துகிறது.
மணல் குவாரி முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை விசாரிக்காமல் தடுக்க, திமுக அரசு முயற்சிப்பது ஏன்? தங்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக, வேண்டுமென்றே அரசுக்கு ஏற்படுத்திய இழப்பு, அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகிவிடும் என்று ஊழல் திமுக அரசு பயப்படுகிறதா? இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.