
அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து மும்பைக்கு கொல்கத்தா வழியாக நேற்று அதிகாலை போயிங் ரக ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. நடுவானில் வந்து கொண்டு இருந்தபோது திடீரென விமானத்தில் கரப்பான் பூச்சிகள் அங்கும், இங்கும் ஓடத்தொடங்கின. கரப்பான் பூச்சிகள் காணப்பட்ட இருக்கையில் இருந்த 2 பயணிகள் இதுகுறித்து விமான பணியாளர்களிடம் புகார் அளித்தனர். உடனடியாக பணியாளர்கள் அந்த பயணிகளுக்கு வேறு இடத்தில் இருக்கைகளை ஒதுக்கினர்.
பின்னர் விமானம் கொல்கத்தாவில் இறங்கியுடன் கரப் பான் பூச்சிகள் நடமாட்டம் இருந்த இருக்கைகள் சுத்தம் செய்யப்பட்டன. அதன்பிறகு விமானம் மும்பை புறப்பட்டு வந்தது.ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சிதொல்லை ஏற்படுத்திய சம்பவம் விமான பயணிகள் இடையே அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, இனிவரும் காலங்களில் இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்க உரிய நடவடிக்கைஎடுப்ப தாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்து உள்ளது.கரப்பான் பூச்சி தொல்லை