கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி, மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் உடல்நலம் காரணமாகவும் செயல்பாடுகளாலும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழக அமைச்சரவை விரிவாக்கம்.?
அதுமட்டுமின்றி தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வசம் உள்ள மணல் குவாரி, சுரங்கங்கள் மற்றும் கனிம வளத்துறையை வேறு ஒரு அமைச்சருக்கு பிரித்துக் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மணல் குவாரி மற்றும் கனிமவளத்துறையில் நடந்த புகார்கள் காரணமாக அமலாக்கத்துறை விசாரணை தீவிரமாகி வரும் நிலையில் இந்த மாற்றங்களை செய்ய தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும் புதிதாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் உதயநிதிக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது