
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் நடந்த குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரியை நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணைக்கு அனுமதி கிடைக்கவில்லை என சிபிஐ தரப்பில் மீண்டும் நீதிமன்றத்தில் தகவல்
தொடர்ந்து பலமுறை இதே காரணத்தை கூறுவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, விசாரணை அதிகாரியை ஆஜராக உத்தரவிட்டு வழக்கை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்