
வெல்லத்துடன் இதனை சேர்த்து சாப்பிட்டு பாருங்கள்.. உடனடி தீர்வை பெறலாம்.
வெல்லத்தின் பல்வேறு நன்மைகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். மேலும் வறுத்த உப்புக்கடலை சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம்.
ஆனால் இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நாம் கேள்விபட்டிருக்க மாட்டோம்.
எனவே வெல்லம் மற்றும் உப்புக்கடலையை ஒன்றாகச் சாப்பிடுவதன் மூலம் அவற்றின் நன்மைகள் இரண்டு மடங்கு அதிகரிக்கும்.
உடலில் ரத்த பற்றாக்குறை இருக்கும்போது வெல்லம் மற்றும் உப்புக்கடலை எடுத்து கொள்வது இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு. உப்புக்கடலையுடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிடுவது உடலின் ரத்தத்தை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் ரத்த சோகை பிரச்சனையை அகற்ற உதவுகிறது.
உடலுக்கு தேவையான ஆற்றல் வலிமையை கொடுப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு இதனால் அதிக நன்மைகள் ஏற்படுகிறது.
வறுத்த உப்புக்கடலையில் இரும்பு மற்றும் புரத சத்தும், வெல்லத்தில் இரும்பு சத்தும் உள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக உட்கொள்வதன் மூலம் உடலில் இரும்பு மற்றும் புரதத்தின் குறைபாடு பூர்த்தி செய்யப்படுகிறது.
எலும்புகளை வலுப்படுத்த வெல்லம், உப்புக்கடலை ஆகியவற்றை ஒன்றாக உட்கொள்ளலாம். வயதானதால் எலும்புகள் வலுவிழக்கத் தொடங்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில் அவர்களின் வலிமையை பராமரிக்க உப்புக்கடலையை வெல்லத்துடன் சேர்த்து உட்கொள்ளலாம். இது எலும்புகளுக்கு வலு சேர்க்க உதவும்.