
செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் கோவளத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெறும் இரண்டுநாள் பீச் வாலிபால் போட்டியை முதன்மை கல்வி அலுவலர் சி.கற்பகம் துவக்கிவைத்தார்.
40 மகளிர் 68 ஆடவர் அணிகள் என மொத்தம் 108 அணிகள் பங்கேற்ற நிலையில் ஜினியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் என மூன்று பிரிவுகளில் ஆடவர், மகளிர் என தனித்தனியே நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெறுகிறது.
கடற்கரை மணலில் நடைபெற்ற பீச் வாலிபால் போட்டியில் பங்கேற்ற அணிகள் தங்களின் முழு திறனை வெளிக்காட்டி மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெறும் வாய்ப்புகாக விளையாடினார்கள். முக்கிய இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பதக்கம் பாராட்டுகளுடன் மாநில அணியாக தேர்வு செய்யப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பீச் வாலிபால் போட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் ஷோபனா சுந்தர், மற்றும் கல்வித்துறையினர் கலந்துக்கொண்டனர்.