
மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தவர் பங்காரு அடிகளார்.
ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தவர்.
சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்தவர் பங்காரு அடிகளார்.
பங்காரு அடிகளாரின் ஆன்மிக சேவையை பாராட்டி அவருக்கு 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது மத்திய அரசு.
பங்காரு அடிகளாரை பின்பற்றும் பக்தர்கள் 15 நாடுகளில் உள்ளனர்.