
தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நள்ளிரவில் திடீரென்று இரத்த அழுத்தம் குறைந்ததை அடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இருதய நோய் நிபுணர் ஷாருக் ஆஸ்பி கோல்வல்லாவின் தலைமையில் மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.