
பல்லவரம் அடுத்த ஆட்டு தொட்டி மைதானத்தில் ராஜ்முகில் எண்டர் டெயின்மெண்ட் சார்பில் பிரமாண்ட லண்டன் பிரிட்ஜ் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
பிரமாண்டமான முகப்பு லண்டன் பிரிட்ஜ் தோற்றமே அசத்தலாக காட்சி தருகிறது. வண்ண வண்ண விளக்குகளால் அளங்காரம் செய்யப்பட்டு இருந்தது அதனை தொடர்ந்து உள்ளே நுழைந்தவுடன் லண்டன் பிரிட்ஜ்ல் நடந்து செல்லும் விதமாக அமைந்துள்ளது. இதனால் இங்கு இருந்தே பார்வையாளர்கல் தங்களின் செல்போனிலும் செல்பி, விடியோ ஒளிப்பதிவு செய்தவாறு குதுகளத்துடன் உள்ளே செல்கிறார்கள் அங்கும் சின்பன்சி குரங்கு, டயனசர் உயர் கோபுர கட்டிடங்கள் அரிய புகைப்படங்கள் என வெளிநாட்டு சுற்றுலா அனுபவதை கொடுக்கிறது.
சிறுவர்களுக்கு இலக்கை தாக்கினால் பரிசு, அதிக எண்ணிக்கை பெற்றால் பெரிய டிடடி பியர் பொம்மை பலூன் சுடுதல் என விளையாட்டுகளை ஈடுபடும் விதமாகவும் இருந்தது.
அதனை தாண்டி உள்ளே சென்றால் சிறுவர்கள் பெரியவர்கள் என அவர் அவர் ஆர்வத்தை தூண்டும் விதமாக ராட்டினங்கள் சுழண்டன.
இதில் சிறுவர்கள் குதிரை ராட்டினம், அன்னப்பறவை சுழல்வது, குதித்து விளையாடிவது, ஒன்றரை அடி நீரில் மினி படகுகளை சிறுவர்களை கையால் இயக்கி ஆனந்தமடைந்தனர்.
பெரியவர்களுக்கு கப்பல் ராட்டிணம், உயரமான ஜம்போ வீல் ராட்டினம், டிஸ்கோ கோஸ்ட், பிரமிக் டான்ஸ், டிரைன் உள்ளிட்ட ராட்டினங்கள் ஆர்வத்தை தூண்டி கவர்ந்தன.
கார், ஹெலிக்காப்டர், ஏர் பலுன் சர்கஸ் நேரம் போவதே தெரியாமல் பொழுதை சிறுவர்கள், பெற்றோர்கள், பெரியவர்கள் என மகிழ்சியாக பங்கேற்றனர்.
அதனை தொடந்து திகிலூட்டும் டெவில் ஹவுஸ், பனி மழையில் நனைய ஸ்நோ ஹவுஸ் வண்ண விளக்குகள் வெளிச்சத்தில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு பசி எடுக்க கண்காட்சியில் அமைக்கப்பட்ட நொருக்கு தீனி கடைகள் எங்கே என தேடிய பார்வையாளர்களுக்கு கண் முன்பே பொறித்து தரப்படும் பெரிய அப்பளம், உருளை கிழங்கு அடுக்கு சிப்ஸ், பஜ்ஜி, பஞ்சுமிட்டாய், பாவ் பஜ்ஜி சுவைத்தனர்
இது போல் பல்லாவரம் சுற்றுவட்ட பகுதியினரை கவரும் விதமாக அமைக்கப்பட்ட லண்டன் பிரிட்ஜ் கண்காட்சிக்கு வந்தவர்கள் குழந்தைகளின் மகிழ்சியை முகத்தில் கண்டவாறு தங்களும் சிலமணி நேரம் பொழுதை கழித்து மன நிறைவுடன் சென்றனர்.